caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 46

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:46

يُوسُفُ أَيُّهَا ٱلصِّدِّيقُ أَفْتِنَا فِى سَبْعِ بَقَرَٰتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعِ سُنۢبُلَٰتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَٰتٍ لَّعَلِّىٓ أَرْجِعُ إِلَى ٱلنَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionயூஸுஃபே! உண்மையாளரே! (அரசர் கனவில் பார்த்த) கொழுத்த ஏழு பசுக்கள் - அவற்றை இளைத்த ஏழு பசுக்கள் புசிக்கின்றன - (அது) பற்றியும் பசுமையான ஏழு கதிர்கள், காய்ந்த மற்ற (ஏழு) கதிர்கள் பற்றியும் எங்களுக்கு விளக்கம் தருவீராக! நான் மக்களிடம் திரும்பி செல்லவேண்டும். அவர்கள் (இதன் விளக்கத்தை) அறியவேண்டும்.
Tamil Translation - Omar Sharifயூஸுஃபே! உண்மையாளரே! (அரசர் கனவில் பார்த்த) கொழுத்த ஏழு பசுக்கள், - அவற்றை இளைத்த ஏழு பசுக்கள் புசிக்கின்றன - அது பற்றியும்; இன்னும், பசுமையான ஏழு கதிர்கள், மற்றும் காய்ந்த வேறு (ஏழு) கதிர்கள் பற்றியும் எங்களுக்கு விளக்கம் தருவீராக! நான் மக்களிடம் திரும்பி செல்லவேண்டும், அவர்கள் (இதன் விளக்கத்தை) அறியவேண்டும்.
Tamil Translation - Abdulhamid Baqawi46. (அவன் சிறைக்கூடம் சென்று யூஸுஃபை நோக்கி “கனவுகளுக்கு) உண்மை(யான வியாக்கியானம்) கூறுபவரே! யூஸுஃபே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் போலும், முதிர்ந்து விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்த மற்ற ஏழு கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பலன் என்ன? அதை) நீர் எங்களுக்கு அறிவிப்பீராக! (என்னை அனுப்பிய) மக்கள் (இதைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் செல்ல வேண்டியது இருக்கிறது'' என்று கூறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70