caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 4

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:4

إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَٰٓأَبَتِ إِنِّى رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ رَأَيْتُهُمْ لِى سَٰجِدِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionயூஸுஃப் தன் தந்தைக்கு “என் தந்தையே! நிச்சயமாக நான் பதினொரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் கனவில் கண்டேன். எனக்குச் சிரம் பணியக்கூடியவையாக அவற்றை நான் கனவில் கண்டேன்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருவீராக.
Tamil Translation - Omar Sharif“என் தந்தையே! நிச்சயமாக நான் பதினொரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் கனவில் கண்டேன். அவை எனக்குச் சிரம் பணியக்கூடியவையாக இருக்கும் நிலையில் அவற்றை நான் கனவில் கண்டேன்” என்று யூஸுஃப் தன் தந்தைக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi4. யூஸுஃப் (நபி, யஅகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்'' என்று கூறிய சமயத்தில்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70