قَالَ إِنِّى لَيَحْزُنُنِىٓ أَن تَذْهَبُوا۟ بِهِۦ وَأَخَافُ أَن يَأْكُلَهُ ٱلذِّئْبُ وَأَنتُمْ عَنْهُ غَٰفِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“நிச்சயமாக நான், நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்கு கவலையளிக்கும். நீங்கள் (விளையாட்டில்) அவரை விட்டு கவனமற்றவர்களாக இருக்க, ஓநாய் அவரை தின்றுவிடுவதைப் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்கு கவலையளிக்கிறது. நீங்கள் (விளையாட்டில் இருக்கும்போது) அவரை கவனிக்காதவர்களாக இருக்கும் நிலையில் ஓநாய் அவரை தின்றுவிடுவதை நிச்சயமாக நான்,பயப்படுகிறேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi13. (அதற்கவர்) ‘‘நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்குத் துக்கத்தை உண்டு பண்ணிவிடும். நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை மறந்து பராமுகமாய் இருக்கும் சமயத்தில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்றுவிடும் என்றும் நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.