وَيَٰقَوْمِ أَوْفُوا۟ ٱلْمِكْيَالَ وَٱلْمِيزَانَ بِٱلْقِسْطِ وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎன் மக்களே! அளவையிலும் நிறுவையிலும் நீதமாக (பொருள்களை) முழுமைப்படுத்துங்கள். மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைக்காதீர்கள். பூமியில் விஷமிகளாக இருந்து கலகம் செய்யாதீர்கள்.
Tamil Translation - Omar Sharifஎன் மக்களே! அளவையையும் நிறுவையையும் நீதமாக (அவற்றில் பொருள்களை குறைக்காமல்) முழுமைப்படுத்துங்கள். இன்னும், மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைக்காதீர்கள். இன்னும், நீங்கள் பூமியில் விஷமிகளாக (-மக்களுக்கு கெடுதி விளைவிப்பவர்களாக) இருக்கும் நிலையில் எல்லை மீறி விஷமம் (கலகம், அடாவடித்தனம்) செய்யாதீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi85. என் மக்களே! அளவையையும் நிறுவையையும் நீதமாகவே முழுமைப்படுத்துங்கள். மனிதர்களுக்கு(க் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருள்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் கடுமையாக விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்.