وَلَمَّا جَآءَتْ رُسُلُنَا لُوطًا سِىٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالَ هَٰذَا يَوْمٌ عَصِيبٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம் தூதர்கள் லூத்திடம் வந்தபோது, அவர்களால் சிரமத்திற்குள்ளானார். அவர்களால் மனம் சுருங்கினார் “இது மிகக் கடுமையான நாள்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நம் தூதர்கள் லூத்திடம் வந்தபோது, அவர்களால் அவர் சங்கடத்திற்குள்ளானார். இன்னும், அவர்களால் அவர் மனம் சுருங்கினார். இன்னும், “இது மிகக் கடுமையான (சோதனை) நாள்” என்று கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi77. (இப்றாஹீமிடமிருந்து) நம் தூதர்கள் லூத்திடம் வந்தபொழுது, அவர் (அந்த வானவர்களைத் தம் மக்களிடமிருந்து எப்படி பாதுகாப்பது என்று) கவலைக்குள்ளாகி அவரது மனம் சுருங்கி ‘‘இது மிக நெருக்கடியான நாள்'' என்று கூறினார்.