يَٰٓإِبْرَٰهِيمُ أَعْرِضْ عَنْ هَٰذَآ إِنَّهُۥ قَدْ جَآءَ أَمْرُ رَبِّكَ وَإِنَّهُمْ ءَاتِيهِمْ عَذَابٌ غَيْرُ مَرْدُودٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇப்ராஹீமே! (தர்க்கம் செய்யாது) இதை விட்டு புறக்கணிப்பீராக! நிச்சயமாக உம் இறைவனின் கட்டளை வந்து விட்டது. நிச்சயமாக அவர்கள், தடுக்கப்பட முடியாத வேதனை அவர்களுக்கு வரும்.
Tamil Translation - Omar Sharifஇப்ராஹீமே! (தர்க்கம் செய்யாது) இதை விட்டும் புறக்கணிப்பீராக! நிச்சயமாக உம் இறைவனின் கட்டளை வந்து விட்டது. இன்னும், நிச்சயமாக அவர்கள் - தடுக்கமுடியாத தண்டனை அவர்களுக்கு வரும்.
Tamil Translation - Abdulhamid Baqawi76. (ஆகவே, அத்தூதர்கள் இப்றாஹீமை நோக்கி) இப்றாஹீமே! நீர் இதைப் (பற்றி தர்க்கம் செய்யாது) புறக்கணித்து விடுவீராக. நிச்சயமாக (அவர்களை அழிப்பதற்காக) உமது இறைவனுடைய கட்டளை பிறந்து விட்டது. மேலும், நிச்சயமாக அவர்களால் தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும் (என்று கூறினார்கள்).