وَلَآ أَقُولُ لَكُمْ عِندِى خَزَآئِنُ ٱللَّهِ وَلَآ أَعْلَمُ ٱلْغَيْبَ وَلَآ أَقُولُ إِنِّى مَلَكٌ وَلَآ أَقُولُ لِلَّذِينَ تَزْدَرِىٓ أَعْيُنُكُمْ لَن يُؤْتِيَهُمُ ٱللَّهُ خَيْرًا ٱللَّهُ أَعْلَمُ بِمَا فِىٓ أَنفُسِهِمْ إِنِّىٓ إِذًا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎன்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் உள்ளன என்றும் நான் உங்களுக்கு கூறமாட்டேன். நான் மறைவானவற்றை அறியமாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவன் என்றும் கூறமாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்கிறவர்களை நோக்கி அல்லாஹ் அவர்களுக்கு ஒரு நன்மையையும் கொடுக்கவே மாட்டான் என்றும் நான் கூறமாட்டேன். அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் உள்ளதை மிக அறிந்தவன். (இதற்கு மாறாக நான் கூறினால்) அப்போது நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில்தான் ஆவேன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “என்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் உள்ளன என்றும் நான் உங்களுக்கு கூறமாட்டேன். இன்னும், நான் மறைவானவற்றை அறியமாட்டேன். இன்னும், நிச்சயமாக நான் ஒரு வானவன் என்றும் கூறமாட்டேன். இன்னும், உங்கள் கண்கள் இழிவாக மதிக்கின்ற (முஃமினா)வர்களை நோக்கி, அல்லாஹ் அவர்களுக்கு ஒரு நன்மையையும் கொடுக்கவே மாட்டான் என்றும் நான் கூற மாட்டேன். அல்லாஹ், அவர்களின் உள்ளங்களில் உள்ளதை மிக அறிந்தவன். (இதற்கு மாறாக நான் கூறினால்) அப்போது நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi31. அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் (அனைத்தும்) என்னிடம் இருக்கின்றன என்றும் நான் உங்களிடம் கூறவில்லை; நான் மறைவானவற்றை அறிந்தவனும் அல்லன்; நான் ஒரு வானவர் என்றும் கூறவில்லை. எவர்களை உங்கள் கண்கள் இழிவாகக் காண்கின்றனவோ அவர்களுக்கு அல்லாஹ் ஒரு நன்மையும் அளிக்க மாட்டான் என்றும் நான் கூறமாட்டேன். அவர்கள் உள்ளத்தில் உள்ள (நம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியவற்றை உங்களைவிட) அல்லாஹ்தான் மிகவும் அறிந்தவன். (இதற்கு மாறாக நான் கூறினால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்'' (என்றும் கூறினார்.)