caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 119

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:119

إِلَّا مَن رَّحِمَ رَبُّكَ وَلِذَٰلِكَ خَلَقَهُمْ وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ أَجْمَعِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்களில்) உம் இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. (அவர்கள் ஒரே மார்க்கத்தில் இருப்பார்கள்.) (ஒரே மார்க்கத்தில் இருந்து) இ(றை அருளை பெறுவ)தற்காகத்தான் அவன் அவர்களைப் படைத்தான். “ஜின்கள் இன்னும் மக்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்” என்ற உம் இறைவனின் வாக்கு நிறைவேறியது.
Tamil Translation - Omar Sharif(எனினும், அவர்களில்) உம் இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. (அவர்கள் அல்லாஹ்வின் நேரிய ஓரே மார்க்கத்தில் நிலைத்திருப்பார்கள். ஒரே மார்க்கத்தில் நிலைத்திருந்து அல்லாஹ்வின்) அ(ருளை பெறுவ)தற்காகத்தான் அவன் அவர்களைப் படைத்தான். “ஜின்கள்; இன்னும், மனிதர்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்” என்ற உம் இறைவனின் வாக்கு நிறைவேறி விட்டது.
Tamil Translation - Abdulhamid Baqawi119. அவர்களில் உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. (அவர்கள் மார்க்கத்தில் முரண்பட மாட்டார்கள்) இதற்காகவே அவர்களைப் படைத்தும் இருக்கிறான். (பாவம் செய்த) ‘‘ஜின்களைக் கொண்டும் மனிதர்களைக் கொண்டும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்'' என்ற உமது இறைவனின் வாக்கு நிறைவேறியே தீரும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70