فَلَمَّآ أَلْقَوْا۟ قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ ٱلسِّحْرُ إِنَّ ٱللَّهَ سَيُبْطِلُهُۥٓ إِنَّ ٱللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ ٱلْمُفْسِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவர்கள் எறிந்தபோது, (அவர்களை நோக்கி) “நீங்கள் செய்தவை (அனைத்தும் வெறும்) சூனியம்தான். நிச்சயமாக அல்லாஹ் அவற்றை அழிப்பான். நிச்சயமாக அல்லாஹ் விஷமிகளின் செயலை சீர்படுத்தமாட்டான்” என்று மூஸா கூறினார்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் எறிந்தபோது, (அவர்களை நோக்கி) மூஸா கூறினார்: “நீங்கள் செய்தவை (அனைத்தும் வெறும்) சூனியம்தான். நிச்சயமாக அல்லாஹ் அவற்றை விரைவில் அழிப்பான். நிச்சயமாக அல்லாஹ் விஷமிகளின் செயலை சீர் செய்ய மாட்டான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi81. (அவ்வாறு) அவர்கள் எறி(ந்து சூனியம் செய்)யவே, மூஸா (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் செய்தவை அனைத்தும் (வெறும்) சூனியம்தான். அதிசீக்கிரத்தில் நிச்சயமாக அல்லாஹ் இவற்றை அழித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (சூனியம் செய்து) விஷமம் செய்பவர்களின் செயலை சீர்படச் செய்வதில்லை.