caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 78

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:78

قَالُوٓا۟ أَجِئْتَنَا لِتَلْفِتَنَا عَمَّا وَجَدْنَا عَلَيْهِ ءَابَآءَنَا وَتَكُونَ لَكُمَا ٱلْكِبْرِيَآءُ فِى ٱلْأَرْضِ وَمَا نَحْنُ لَكُمَا بِمُؤْمِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதற்கவர்கள் “எங்கள் மூதாதையர்களை எதில் நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களை நீர் திருப்பி விடுவதற்கும், பூமியில் உங்கள் இருவருக்கும் மகத்துவ(மு)ம் (பெருமையும் ஆதிக்கமும்) ஆகிவிடுவதற்கு நீர் எங்களிடம் வந்தீரா? உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்களாக நாங்கள் இல்லை.” என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறினார்கள்: “எங்கள் மூதாதையர்களை நாங்கள் எதில் கண்டோமோ அதிலிருந்து எங்களை நீர் திருப்பி விடுவதற்கும், பூமியில் உங்கள் இருவருக்கும் தலைமைத்துவம் (பெருமை, ஆதிக்கம்) ஆகிவிட வேண்டும் என்பதற்காக நீர் எங்களிடம் வந்தீரா? இன்னும், நாங்கள் உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.”
Tamil Translation - Abdulhamid Baqawi78. அதற்கவர்கள் ‘‘எங்கள் மூதாதையர்கள் எதில் இருக்க நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இப்புவியில் நீங்கள் இருவரும் பெரியவர்களாகி விடவுமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? உங்கள் இருவரையும் (இறைவனின் தூதர்கள் என்று) நாங்கள் நம்பவே மாட்டோம்'' என்று கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70