هُنَالِكَ تَبْلُوا۟ كُلُّ نَفْسٍ مَّآ أَسْلَفَتْ وَرُدُّوٓا۟ إِلَى ٱللَّهِ مَوْلَىٰهُمُ ٱلْحَقِّ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅங்கு ஒவ்வொரு ஆத்மாவும் தான் முன் செய்தவற்றைச் சோதிக்கும். அவர்கள் தங்கள் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கம் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டு மறைந்துவிடும்.
Tamil Translation - Omar Sharifஅங்கு (மறுமையில்), ஒவ்வொரு ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றை நன்கு அறிந்துகொள்ளும். இன்னும், அவர்கள் தங்கள் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கம் கொண்டு வரப்படுவார்கள். (தெய்வங்கள் என்று) அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை (இறுதியாக) அவர்களை விட்டும் மறைந்துவிடும்.
Tamil Translation - Abdulhamid Baqawi30. அங்கு ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த செயலைச் சோதித்து (அது நன்மையா? தீமையா? என்பதை) அறிந்து கொள்ளும். பின்னர், அவர்கள் தங்கள் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கமே கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.