إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ وَٱلْمُشْرِكِينَ فِى نَارِ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أُو۟لَٰٓئِكَ هُمْ شَرُّ ٱلْبَرِيَّةِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக வேதக்காரர்கள் இன்னும் இணைவைப்போர் ஆகிய நிராகரிப்பாளர்கள் ஜஹன்னம் நெருப்பில் அதில் நிரந்தர மானவர்களாக இருப்பார்கள். இவர்கள் தான் படைப்புகளில் மகா தீயோர்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக வேதக்காரர்கள்; இன்னும், இணைவைப்போர் ஆகிய நிராகரிப்பாளர்கள் ஜஹன்னம் எனும் நரக நெருப்பில் - அதில் நிரந்தரமானவர்களாக இருப்பார்கள். இவர்கள்தான் படைப்புகளில் மகா தீயோர் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. ஆகவே, வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக நரக நெருப்பில் தான் இருப்பார்கள். அதில், அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இவர்கள்தான் படைப்புகளில் மகா கெட்டவர்கள்.