رَضُوا۟ بِأَن يَكُونُوا۟ مَعَ ٱلْخَوَالِفِ وَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபின் தங்கிய பெண்களுடன் அவர்கள் ஆகிவிடுவதைக் கொண்டு திருப்தியடைந்தனர். அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டது. அவர்கள் சிந்தித்து விளங்க மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifபின் தங்கிய பெண்களுடன் அவர்கள் இருந்துவிடுவதைக் கொண்டு திருப்தியடைந்தனர். இன்னும், அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டது. ஆகவே, அவர்கள் சிந்தித்து விளங்க மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi87. (சிறியோர், முதியோர், பெண்கள் போன்ற போருக்கு வரமுடியாமல் வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் தாங்களும் இருந்துவிடவே விரும்புகின்றனர். அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. (ஆதலால் இதிலுள்ள இழிவை) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.