قُلْ أَنفِقُوا۟ طَوْعًا أَوْ كَرْهًا لَّن يُتَقَبَّلَ مِنكُمْ إِنَّكُمْ كُنتُمْ قَوْمًا فَٰسِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“விருப்பமாக அல்லது வெறுப்பாக தர்மம் செய்யுங்கள். (எப்படி செய்தாலும் உங்கள் தர்மம்) உங்களிடமிருந்து அறவே அங்கீகரிக்கப்படாது. நிச்சயமாக நீங்கள் பாவிகளான மக்களாக ஆகிவிட்டீர்கள்” என்று கூறுவீராக!
Tamil Translation - Omar Sharif(நபியே! நயவஞ்சககர்களை நோக்கி) கூறுவீராக: “விருப்பமாக அல்லது வெறுப்பாக தர்மம் செய்யுங்கள். (எப்படி செய்தாலும் உங்கள் தர்மம்) உங்களிடமிருந்து அறவே அங்கீகரிக்கப்படாது. நிச்சயமாக நீங்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுகின்ற) பாவிகளான மக்களாக ஆகிவிட்டீர்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi53. ‘‘நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எதைத்) தானம் செய்த போதிலும் (அது) உங்களிடமிருந்து அங்கீகரிக்கப்படவே மாட்டாது. ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்'' என்றும் (நபியே!) நீர் கூறிவிடுவீராக.