فَإِن تَوَلَّوْا۟ فَقُلْ حَسْبِىَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே) கூறுவீராக! அவர்கள் (உம்மை விட்டு விலகி) திரும்பினால் “எனக்குப் போதுமானவன் அல்லாஹ்தான்; அவனைத் தவிர அறவே வணக்கத்திற்குரிய (வேறு இறை)வன் இல்லை; அவன் மீதே நான் நம்பிக்கை வைத்துவிட்டேன்; அவன் மகத்தான ‘அர்ஷின்’ அதிபதி.”
Tamil Translation - Omar Sharif(நபியே) ஆக, அவர்கள் (உம்மை விட்டு புறக்கணித்து) விலகி சென்றால், “எனக்குப் போதுமானவன் அல்லாஹ்தான்; அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை; அவன் மீதே நான் நம்பிக்கை வைத்து (அவனையே சார்ந்து) விட்டேன்; இன்னும், அவன் மகத்தான ‘அர்ஷின்’ அதிபதி” என்று கூறுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi129. (நபியே இதற்குப்) பின்னரும் அவர்கள் (உம்மைப் பின்பற்றாது) விலகிக் கொண்டால் (அவர்களை நோக்கி) கூறுவீராக ‘‘அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை; (என் காரியங்கள் அனைத்தையும்) அவனிடமே நான் நம்பிக்கை வைத்து (ஒப்படைத்து) விட்டேன்; அவன்தான் மகத்தான ‘அர்ஷின்' அதிபதி ஆவான்.