caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 52

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:52

كَدَأْبِ ءَالِ فِرْعَوْنَ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ كَفَرُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمْ إِنَّ ٱللَّهَ قَوِىٌّ شَدِيدُ ٱلْعِقَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஃபிர்அவ்னுடைய சமுதாயம் இன்னும் அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் நிலைமையைப் போன்று (இவர்களுடைய நிலைமை இருக்கிறது). அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களினால் அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவன், தண்டிப்பதில் கடுமையானவன்.
Tamil Translation - Omar Sharifஃபிர்அவ்னுடைய சமுதாயத்தின் நிலைமையைப் போன்றும்; இன்னும், அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் நிலைமையைப் போன்றும் (இவர்களுடைய நிலைமை இருக்கிறது). அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களினால் அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவன், தண்டிப்பதில் கடுமையானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi52. ஃபிர்அவ்னுடைய மக்களின் நிலைமை, இன்னும் அவர்களுக்கு முன்னிருந்த வர்களின் நிலைமை போலவே (இவர்களுடைய நிலைமையும் இருக்கிறது.) அவர்களும் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தனர். ஆதலால், அவர்களின் பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவனும், வேதனை செய்வதில் மிகக் கடினமானவனும் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70