وَلَوْ تَرَىٰٓ إِذْ يَتَوَفَّى ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلْمَلَٰٓئِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَٰرَهُمْ وَذُوقُوا۟ عَذَابَ ٱلْحَرِيقِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானவர்கள் நிராகரித்தவர்களை -அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவர்களாக, “எரிக்கக்கூடிய (நரக) வேதனையை சுவையுங்கள்” (என்று கூறி)- உயிர் கைப்பற்றும் போது நீர் பார்த்தால்... (அது ஒரு பயங்கர காட்சியாக இருக்கும்.)
Tamil Translation - Omar Sharif(நபியே!) வானவர்கள், நிராகரித்தவர்களை - அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவர்களாக - “எரிக்கக்கூடிய (நரக) தண்டனையை சுவையுங்கள்” (என்று கூறியவர்களாக) - உயிர் கைப்பற்றும்போது நீர் பார்த்தால் (அது ஒரு பயங்கரமான காட்சியாக இருக்கும்).
Tamil Translation - Abdulhamid Baqawi50. வானவர்கள் நிராகரிப்பவ(ரின் உயி)ர்களைக் கைப்பற்றும் சமயத்தில், அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்து (நரகத்திற்கு ஓட்டிச் சென்று) ‘‘எரிக்கும் (நரக) வேதனையை சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறுவதை (நபியே!) நீர் பார்க்க வேண்டாமா?