caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 46

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:46

وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَنَٰزَعُوا۟ فَتَفْشَلُوا۟ وَتَذْهَبَ رِيحُكُمْ وَٱصْبِرُوٓا۟ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; தர்க்கிக்காதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் துணிவிழப்பீர்கள்; உங்கள் ஆற்றல் சென்றுவிடும். பொறுத்திருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; இன்னும், (உங்களுக்குள்) தர்க்கிக்காதீர்கள் (சண்டை சச்சரவு செய்து கொள்ளாதீர்கள்)!. அவ்வாறாயின், நீங்கள் தோற்றுவிடுவீர்கள்; இன்னும், உங்கள் ஆற்றலும் போய்விடும். இன்னும், நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi46. மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (உங்களுக்குள் ஒற்றுமையாயிருங்கள்.) உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் ஆற்றல் போய்விடும். ஆகவே, நீங்கள் (சிரமங்களைச் சகித்துக் கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70