caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 34

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:34

وَمَا لَهُمْ أَلَّا يُعَذِّبَهُمُ ٱللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنِ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَمَا كَانُوٓا۟ أَوْلِيَآءَهُۥٓ إِنْ أَوْلِيَآؤُهُۥٓ إِلَّا ٱلْمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இவ்விரு காரணங்கள் இல்லாதிருப்பின்) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருக்க அவர்களுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? அவர்களோ (மக்களை) புனிதமான மஸ்ஜிதை விட்டுத் தடுக்கின்றனர். அவர்கள் அதன் பொறுப்பாளர்களாக இல்லை. அதன் பொறுப்பாளர்கள் இறை அச்சமுள்ளவர்களே தவிர வேறு (எவரும்) இல்லை. எனினும், நிச்சயமாக அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(இவ்விரு காரணங்கள் இல்லாதிருப்பின்) அல்லாஹ் அவர்களை தண்டிக்காமல் இருக்க அவர்களுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? அவர்களோ (நம்பிக்கையாளர்களை) புனிதமான மஸ்ஜிதை விட்டுத் தடுக்கிறார்கள். அவர்களோ அதன் பொறுப்பாளர்களாக இருக்கவில்லை. அதன் பொறுப்பாளர்கள் இல்லை, இறை அச்சமுள்ளவர்களே தவிர. எனினும், நிச்சயமாக அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi34. (இவ்விரு காரணங்களும் இல்லாதிருப்பின்) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருப்பதற்கு என்ன (தடை) இருக்கிறது? ஏனென்றால், அவர்களோ சிறப்புற்ற மஸ்ஜிதுக்கு (மக்கள்) செல்வதைத் தடுக்கின்றனர். அவர்கள் அதற்கு பொறுப்பாளர்களல்ல. இறையச்சமுடையவர்களைத் தவிர வேறு எவரும் அதன் பொறுப்பாளர்களாக இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70