caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naba அத்தியாயம், வசனம் 38

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 80 · 78:38

يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّا لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஜிப்ரீலும், மலக்குகளும் வரிசையாக நிற்கின்ற நாளில் பேரருளாளன் (அல்லாஹ்) எவருக்கு அனுமதித்தானோ அவரைத் தவிர (மற்றவர்கள்) பேசமாட்டார்கள். (அனுமதிக்கப்பட்டவர்) சரியானதையே கூறுவார்.
Tamil Translation - Omar Sharifஜிப்ரீலும், மலக்குகளும் வரிசையாக நிற்கிற நாளில். பேரருளாளன் (அல்லாஹ்) எவருக்கு அனுமதித்தானோ அவரைத் தவிர பேசமாட்டார்கள். இன்னும், (பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட) அவர் சரியானதையே கூறுவார்.
Tamil Translation - Abdulhamid Baqawi38. ஜிப்ரயீலும், வானவர்களும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து ‘‘சரி! பேசுவீராக!'' எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70