caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Nooh அத்தியாயம், வசனம் 4

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 71 · 71:4

يَغْفِرْ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى إِنَّ أَجَلَ ٱللَّهِ إِذَا جَآءَ لَا يُؤَخَّرُ لَوْ كُنتُمْ تَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; குறிப்பிட்ட தவணை வரை அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வந்துவிட்டால் அது பிற்படுத்தப்படாது. நீங்கள் (இதை) அறிபவர்களாக இருக்க வேண்டுமே!
Tamil Translation - Omar Sharifஅவன் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; இன்னும், குறிப்பிட்ட தவணை வரை அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வந்துவிட்டால் அது பிற்படுத்தப்படாது. நீங்கள் (இதை) அறிபவர்களாக இருக்க வேண்டுமே!”
Tamil Translation - Abdulhamid Baqawi4. (அவ்வாறு நீங்கள் நடந்தால், அல்லாஹ்) உங்கள் குற்றங்களை மன்னித்து, குறிப்பிட்ட காலம் வரை உங்களை (அமைதியாக வாழ) விட்டு வைப்பான். நிச்சயமாக (வேதனைக்காகக் குறிப்பிடப்பட்ட) அல்லாஹ்வுடைய தவணை வரும் சமயத்தில், அது ஒரு சிறிதும் பிந்தாது (இதை) நீங்கள் உறுதியாக நம்ப வேண்டாமா?''
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70