وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْقُرَىٰٓ ءَامَنُوا۟ وَٱتَّقَوْا۟ لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَٰتٍ مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ وَلَٰكِن كَذَّبُوا۟ فَأَخَذْنَٰهُم بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஊர்வாசிகள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சி இருந்தால், அவர்கள் மீது வானம் இன்னும் பூமியிலிருந்து அருள்வளங்களை திறந்திருப்போம். எனினும், (அவர்களோ இறைத் தூதர்களைப்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்ததன் காரணமாக (வேதனையால்) அவர்களைப் பிடித்தோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஊர்வாசிகள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சி இருந்தால், அவர்கள் மீது வானம் இன்னும் பூமியிலிருந்து அருள்வளங்களை திறந்திருப்போம். எனினும், (அவர்களோ நமது தூதர்களைப்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்ததன் காரணமாக (தண்டனையால்) அவர்களைப் பிடித்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi96. அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும், அவர்களோ (நபிமார்களை நம்பிக்கைகொள்ளாது) பொய்யாக்கினார்கள். ஆகவே, அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.