caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 77

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:77

فَعَقَرُوا۟ ٱلنَّاقَةَ وَعَتَوْا۟ عَنْ أَمْرِ رَبِّهِمْ وَقَالُوا۟ يَٰصَٰلِحُ ٱئْتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلْمُرْسَلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, (அந்தப்) பெண் ஒட்டகத்தை அறுத்தனர். தங்கள் இறைவனின் கட்டளையை மீறினர். “ஸாலிஹே! நீர் தூதர்களில் (ஒருவராக) இருந்தால் நீர் எங்களை அச்சுறுத்துவதை எங்களிடம் கொண்டு வருவீராக!” என்று கூறினர்.
Tamil Translation - Omar Sharifஆக, (அந்தப்) பெண் ஒட்டகத்தை அறுத்தனர். இன்னும், தங்கள் இறைவனின் கட்டளையை மீறினர். இன்னும், “ஸாலிஹே! நீர் (இறைவனுடைய) தூதர்களில் (ஒருவராக) இருந்தால் நீர் எங்களை அச்சுறுத்துவதை எங்களிடம் கொண்டு வருவீராக!” என்று கூறினர்.
Tamil Translation - Abdulhamid Baqawi77. ஆகவே, தங்கள் இறைவனின் கட்டளையை மீறி, அந்த ஒட்டகத்தை அறுத்து (ஸாலிஹ் நபியை நோக்கி), ‘‘ஸாலிஹே! மெய்யாகவே நீர் இறைவனுடைய தூதர்களில் ஒருவராக இருந்தால் நீர் அச்சமூட்டும் அ(ந்)த (வேத)னை(யை) எங்களிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70