قَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ مِن قَوْمِهِۦ لِلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ لِمَنْ ءَامَنَ مِنْهُمْ أَتَعْلَمُونَ أَنَّ صَٰلِحًا مُّرْسَلٌ مِّن رَّبِّهِۦ قَالُوٓا۟ إِنَّا بِمَآ أُرْسِلَ بِهِۦ مُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவருடைய சமுதாயத்தில் பெருமையடித்த தலைவர்கள், அவர்களில் பலவீனர்களாக கருதப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களுக்கு (அவர்களை நோக்கி) “நிச்சயமாக ஸாலிஹ் தன் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட (தூது)வர் என்று நீங்கள் அறிவீர்களா?” என்று கூறினார்கள். “நிச்சயமாக நாங்கள் அவர் அனுப்பப்பட்டதைக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்கள்” என்று (பின்பற்றியவர்கள்) கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவருடைய சமுதாயத்தில் பெருமையடித்த முக்கிய பிரமுகர்கள், அவர்களில் பலவீனர்களாக கருதப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி கூறினார்கள்: “நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட (தூது)வர் என்று நீங்கள் அறிவீர்களா?” (நம்பிக்கை கொண்டவர்கள்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் அவர் அனுப்பப்பட்டதைக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்கள் ஆவோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi75. அதற்கு அவருடைய மக்களில் கர்வம் கொண்டிருந்த தலைவர்கள், தங்களைவிட தாழ்ந்தவர்களென எண்ணிக் கொண்டிருந்த நம்பிக்கையாளர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக இந்த ஸாலிஹ் தம் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரென நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘‘நிச்சயமாக நாங்கள் அவர் கொண்டுவந்த தூதை நம்பிக்கை கொள்கிறோம்'' என்று கூறினார்கள்.