caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 39

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:39

وَقَالَتْ أُولَىٰهُمْ لِأُخْرَىٰهُمْ فَمَا كَانَ لَكُمْ عَلَيْنَا مِن فَضْلٍ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْسِبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களில் முன்சென்ற கூட்டம் அவர்களில் பின்வந்த கூட்டத்திற்கு கூறும்: “எங்களை விட உங்களுக்கு ஒரு மேன்மையும் இல்லை. ஆகவே, நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக வேதனையைச் சுவையுங்கள்”.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்களில் முன்சென்ற கூட்டம் அவர்களில் பின்வந்த கூட்டத்திற்கு கூறும்: “(நாங்கள் நம்பிக்கை கொள்ளாதது போன்றே நீங்களும் நம்பிக்கை கொள்ளவில்லை. எங்களைப் பற்றிய செய்திகள் உங்களுக்கு சொல்லப்பட்டும் நீங்கள் படிப்பினை பெறவில்லை.) ஆகவே, “எங்களை விட உங்களுக்கு ஒரு மேன்மையும் இல்லை.” (அப்போது, அல்லாஹ் - அவர்கள் எல்லோரையும் நோக்கி - கூறுவான்:) ஆக, நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக (எனது) தண்டனையைச் சுவையுங்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi39. அவர்களில் முன் சென்றவர்கள், பின் சென்றவர்களை நோக்கி ‘‘எங்களைவிட உங்களுக்கு ஒரு மேன்மையும் கிடையாது. ஆதலால், நீங்களாகவே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக (நீங்களும் இரு மடங்கு) வேதனையைச் சுவையுங்கள்'' என்று கூறுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70