إِنَّ ٱلَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِۦ وَيُسَبِّحُونَهُۥ وَلَهُۥ يَسْجُدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக உம் இறைவனிடம் உள்ள வானவர்கள் அவனை வணங்குவதைவிட்டு பெருமையடிக்க மாட்டார்கள்; அவனை துதிப்பார்கள்; அவனுக்கே சிரம் பணிவார்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக உம் இறைவனிடம் உள்ள (வான)வர்கள் அவனை வணங்குவதை விட்டு பெருமையடிப்பதில்லை; இன்னும், அவர்கள் அவனை துதிக்கிறார்கள்; இன்னும், அவனுக்கே சிரம் பணிகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi206. எவர்கள் நிச்சயமாக உமது இறைவனிடத்தில் இருக்கிறார்களோ அவர்கள் (வானவர்கள்) இறுமாப்பு கொண்டு அவனை வணங்காதிருப்பதில்லை. எனினும் ‘‘(நீ மிகப் பரிசுத்தமானவன்; நீ மிகப் பரிசுத்தமானவன்'' என்று) அவனை (எப்பொழுதும்) நினைவு செய்து கொண்டும், அவனுக்கு சிரம் பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருக்கின்றனர்.