caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 190

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:190

فَلَمَّآ ءَاتَىٰهُمَا صَٰلِحًا جَعَلَا لَهُۥ شُرَكَآءَ فِيمَآ ءَاتَىٰهُمَا فَتَعَٰلَى ٱللَّهُ عَمَّا يُشْرِكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் அவ்விருவருக்கும் நல்ல குழந்தையைக் கொடுத்தபோது அவ்விருவரும் அவன் கொடுத்தவற்றில் அவனுக்கு இணைகளை ஆக்கினர். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.
Tamil Translation - Omar Sharifஆக, அவன் அவ்விருவருக்கும் நல்ல குழந்தையைக் கொடுத்தபோது அவ்விருவரும் அவன் கொடுத்ததில் அவனுக்கு இணைகளை ஆக்கினர். (இணைவைப்பவர்களான மக்காவாசிகளாகிய) அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிக உயர்ந்தவன். (அவனோடு வணங்கப்பட யாருக்கும் எவ்வித தகுதியும் இல்லை.)
Tamil Translation - Abdulhamid Baqawi190. (அவர்கள் பிரார்த்தனையின்படி) அவர்களுக்கு (இறைவன்) நல்லதோர் சந்ததியை அளித்தாலோ அதை அவர்களுக்கு அளித்ததில் (அவர்களுடைய தெய்வங்களும் துணையாய் இருந்தன என அவற்றை இறைவனுக்குக்) கூட்டாக்குகின்றனர். (அவர்கள் கூறும்) இணை துணைகளிலிருந்து அல்லாஹ் மிக உயர்ந்தவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70