caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 152

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:152

إِنَّ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ ٱلْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌ مِّن رَّبِّهِمْ وَذِلَّةٌ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُفْتَرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாகக் காளைக் கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டவர்கள் உலக வாழ்க்கையில் அவர்களின் இறைவனிடமிருந்து கோபமும் இழிவும் அவர்களை அடையும். இட்டுக்கட்டுபவர்களுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம்.
Tamil Translation - Omar Sharif“நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை உலக வாழ்க்கையில் அவர்களின் இறைவனிடமிருந்து கோபமும் இழிவும் வந்தடையும். இன்னும், (பொய்யை) இட்டுக்கட்டுபவர்களுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi152. (பின்னர் இறைவன் மூஸாவை நோக்கிக் கூறினான்:) ‘‘எவர்கள் காளைக்கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை நிச்சயமாக இறைவனின் கோபமும் இழிவும் இவ்வுலக வாழ்க்கையிலேயே அதிசீக்கிரத்தில் வந்தடையும். பொய்யைக் கற்பனை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70