ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِم مُّوسَىٰ بِـَٔايَٰتِنَآ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَظَلَمُوا۟ بِهَا فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்குப் பின்னர் மூஸாவை நம் அத்தாட்சிகளைக் கொண்டு ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய (அவைத்) தலைவர்களிடம் அனுப்பினோம். (அவர்கள்) அவற்றுக்கு அநீதியிழைத்(து பொய்ப்பித்)தனர். விஷமிகளின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக.
Tamil Translation - Omar Sharifபிறகு, அவர்களுக்குப் பின்னர் மூஸாவை நம் அத்தாட்சிகளைக் கொண்டு, ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களிடம் அனுப்பினோம். ஆக, அவர்கள் அவற்றுக்கு அநீதியிழைத்(து பொய்ப்பித்)தனர். ஆகவே, விஷமிகளின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi103. இதற்குப் பின்னரும் மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் அனுப்பிவைத்தோம். எனினும், அவர்களோ அந்த அத்தாட்சிகளை அவமதித்து (நிராகரித்து) விட்டனர். (இத்தகைய) விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.