caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qalam அத்தியாயம், வசனம் 48

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 2 · 68:48

فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلْحُوتِ إِذْ نَادَىٰ وَهُوَ مَكْظُومٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உமது இறைவனின் தீர்ப்பிற்காக நீர் பொறுமை காப்பீராக! மீனுடையவரைப் போல் (அவர் தனது மக்கள் மீது கோபப்பட்டது போல்) நீர் ஆகிவிடாதீர், அவர் (தனது மக்களை) அழைத்த நேரத்தில், அவர் கடும் கோபமுடையவராக இருந்தார்.
Tamil Translation - Omar Sharifஆக, (நபியே!) உமது இறைவனின் தீர்ப்பிற்காக நீர் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் போன்று நீர் (அவசரக்காரராக) ஆகிவிடாதீர் - அவரோ கடும் துயரத்தில் மூழ்கியவராக இருக்கும் நிலையில் (தனது இறைவனை) அழைத்த நேரத்தில் (அவர் அவசரப்பட்டது போன்று அவசரப்பட்டு விடாதீர்! அவர் கோபப்பட்டது போன்று கோபப்பட்டு விடாதீர்)!
Tamil Translation - Abdulhamid Baqawi48. (நபியே!) உமது இறைவனின் கட்டளைக்காகப் பொறுத்திருப்பீராக. (கோபம் தாங்காது) மீன் வயிற்றில் சென்றவரை (-யூனுஸை)ப் போல் நீரும் ஆகிவிடவேண்டாம். அவர் கோபத்தில் மூழ்கிச் சென்று (மீனால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றில் இருந்துகொண்டு இறைவனைப்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்ப்பீராக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70