caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mulk அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 77 · 67:5

وَلَقَدْ زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِمَصَٰبِيحَ وَجَعَلْنَٰهَا رُجُومًا لِّلشَّيَٰطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ ٱلسَّعِيرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக கீழ் வானத்தை விளக்குகளால் நாம் அலங்கரித்தோம். ஷைத்தான்களை எறிவதற்காக அவற்றை (-நட்சத்திரங்களை) ஏற்படுத்தினோம். இன்னும் அவர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பின் வேதனையை தயார் செய்துள்ளோம்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக கீழ் வானத்தை (நட்சத்திரம் எனும்) விளக்குகளால் நாம் அலங்கரித்தோம். இன்னும், (வானவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்கிற) ஷைத்தான்களை எறிவதற்காக அவற்றை (-நட்சத்திரங்களை) ஏற்படுத்தினோம். இன்னும், அவர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பின் தண்டனையை தயார் செய்துள்ளோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. நிச்சயமாக நாம், சமீபமாக உள்ள வானத்தை (பூமியிலுள்ளவர்களுக்கு நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்தோம். மேலும், அவற்றை ஷைத்தான்களுக்கு ஓர் எறிகல்லாகவும் அமைத்தோம். இன்னும் அவர்களுக்கு நரக வேதனையையும் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70