فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيٓـَٔتْ وُجُوهُ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَقِيلَ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تَدَّعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் அதை மிக நெருக்கமாக (-சமீபமாக) பார்க்கின்றபோது நிராகரித்தவர்களின் முகங்கள் கெட்டுவிடும் (-துக்கத்திற்கு ஆளாகிவிடும்). நீங்கள் எதை தேடுபவர்களாக இருந்தீர்களோ அது இதுதான் என்று அவர்களுக்கு கூறப்படும்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் அ(ந்த மறுமை நிகழ்வ)தை மிக சமீபமாக பார்க்கிறபோது நிராகரித்தவர்களின் முகங்கள் இழிவுக்குள்ளாகி விடும். இன்னும், நீங்கள் எதை தேடி கொண்டிருந்தீர்களோ அ(ந்த மறுமை நாளான)து இதுதான் என்று அவர்களுக்கு கூறப்படும்.
Tamil Translation - Abdulhamid Baqawi27. (நீர் அச்சமூட்டிய) வேதனை (இவர்களை) நோக்கி வருவதை அவர்கள் கண்டால், அந்நிராகரிப்பவர்களுடைய முகங்கள் கருகிவிடும். (இன்னும், அவர்களை நோக்கி) ‘‘(எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தது இதுதான்'' என்றும் கூறப்படும்.