caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mulk அத்தியாயம், வசனம் 21

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 77 · 67:21

أَمَّنْ هَٰذَا ٱلَّذِى يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُۥ بَل لَّجُّوا۟ فِى عُتُوٍّ وَنُفُورٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, அவன் (-அல்லாஹ் உங்களுக்கு வழங்கி வந்த) தனது உணவை (உங்களை விட்டும்) தடுத்து விட்டால் உங்களுக்கு உணவளிக்கின்ற இவர்கள் யார்? (அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு உணவளிப்பதற்கு அப்படி யாரும் இருக்கின்றார்களா?) மாறாக, அவர்கள் வரம்பு மீறுவதிலும் விலகி செல்வதிலும்தான் பிடிவாதம் பிடித்தனர்.
Tamil Translation - Omar Sharifமாறாக, அவன் (-அல்லாஹ் உங்களுக்கு வழங்கி வந்த) தனது உணவை (உங்களை விட்டும்) தடுத்து விட்டால் உங்களுக்கு உணவளிக்கிற இவர் யார்? (அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு உணவளிப்பதற்கு யாரும் இருக்கிறார்களா?) மாறாக, அவர்கள் (உங்களுக்கு தொந்தரவு தருவதில்) எல்லை மீறுவதிலும் (சத்தியத்தை விட்டு) விலகி செல்வதிலும்தான் பிடிவாதம் பிடித்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi21. அல்லாஹ் (உங்களுக்களிக்கும்) தன் உணவைத் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவு கொடுப்பவன் யார்? (இதையும் இவர்கள் கவனிப்பதில்லை.) மாறாக, இவர்கள் வழிகேட்டிலும், (சத்தியத்தை) வெறுப்பதிலுமே மூழ்கிக் கிடக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70