لِيُنفِقْ ذُو سَعَةٍ مِّن سَعَتِهِۦ وَمَن قُدِرَ عَلَيْهِ رِزْقُهُۥ فَلْيُنفِقْ مِمَّآ ءَاتَىٰهُ ٱللَّهُ لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفْسًا إِلَّا مَآ ءَاتَىٰهَا سَيَجْعَلُ ٱللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவசதியுடையவர் தனது வசதியிலிருந்து செலவு செய்யட்டும். எவர் ஒருவர் அவர் மீது அவருடைய வாழ்வாதாரம் நெருக்கடியாக இருக்கின்றதோ அவர் தனக்கு அல்லாஹ் கொடுத்ததில் இருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் ஓர் ஆன்மாவிற்கு சிரமம் கொடுக்க மாட்டான் அவன் அதற்கு கொடுத்ததைத் தவிர (அவன் அதற்கு கொடுத்த சக்திக்கு உட்பட்டே தவிர). சிரமத்திற்கு பின்னர் அல்லாஹ் இலகுவை ஏற்படுத்துவான்.
Tamil Translation - Omar Sharifவசதியுடையவர் தனது வசதியிலிருந்து செலவு செய்யட்டும். எவர் ஒருவர் அவர் மீது அவருடைய வாழ்வாதாரம் நெருக்கடியாக இருக்கிறதோ அவர் தனக்கு அல்லாஹ் கொடுத்ததில் இருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் ஓர் ஆன்மாவிற்கு சிரமம் கொடுக்க மாட்டான், அவன் அதற்கு கொடுத்ததற்கே தவிர (அவன் அதற்கு கொடுத்த சக்திக்கு உட்பட்டே தவிர). சிரமத்திற்கு பின்னர் (-பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர்) அல்லாஹ் இலகுவை (செல்வ விசாலத்தை) ஏற்படுத்துவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. (பால் குடிப்பாட்ட செலவு செய்யும் விஷயத்தில்) வசதியுடையவர் தன் தகுதிக்குத் தக்கவாறு (தாராளமாகச்) செலவு செய்யவும். ஏழ்மையானவர், அல்லாஹ் அவருக்குக் கொடுத்ததிலிருந்துதான் செலவு செய்வார். எம்மனிதனையும் அல்லாஹ் அவனுக்குக் கொடுத்ததற்கு அதிகமாக(ச் செலவு செய்யும்படி) நிர்ப்பந்திப்பதில்லை. சிரமத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதிசீக்கிரத்தில் இலகுவை கொடுத்துவிடுவான்.