قُلْ إِنَّ ٱلْمَوْتَ ٱلَّذِى تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُۥ مُلَٰقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நீங்கள் அதை விட்டு விரண்டு ஓடுகின்ற அந்த மரணம் நிச்சயமாக அது உங்களை சந்திக்கும். பிறகு, நீங்கள் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக நீங்கள் அதிலிருந்து விரண்டு ஓடுகின்ற அந்த மரணம் உறுதியாக அது உங்களை சந்திக்கும். பிறகு, நீங்கள் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. (நபியே! அவர்களை நோக்கி,) கூறுவீராக: ‘‘நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாகப் பிடித்துக் கொள்ளும். பின்னர், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு போகப்பட்டு, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.