لَّا يَنْهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِينَ لَمْ يُقَٰتِلُوكُمْ فِى ٱلدِّينِ وَلَمْ يُخْرِجُوكُم مِّن دِيَٰرِكُمْ أَن تَبَرُّوهُمْ وَتُقْسِطُوٓا۟ إِلَيْهِمْ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُقْسِطِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர்கள் உங்களுடன் மார்க்கத்தில் போர் செய்யவில்லையோ, உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றவில்லையோ அவர்களை விட்டும் -(அதாவது) அவர்களுக்கு நல்லது செய்வதை விட்டும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடப்பதை விட்டும்- அல்லாஹ் உங்களை தடுக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifஎவர்கள் உங்களுடன் மார்க்கத்தில் போர் செய்யவில்லையோ, இன்னும், உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றவில்லையோ அவர்களை விட்டும் (அதாவது,) அவர்களுக்கு நல்லது செய்வதை விட்டும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடப்பதை விட்டும் அல்லாஹ் உங்களை தடுக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் நீதவான்கள் மீது அன்பு வைக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. (நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பான்.