وَمِنْ ءَابَآئِهِمْ وَذُرِّيَّٰتِهِمْ وَإِخْوَٰنِهِمْ وَٱجْتَبَيْنَٰهُمْ وَهَدَيْنَٰهُمْ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (பலரை மேன்மைப்படுத்தினோம்). இன்னும் அவர்களை தேர்ந்தெடுத்தோம், இன்னும் அவர்களுக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (நாம் விரும்பிய பலரை மேன்மைப்படுத்தினோம்). இன்னும் அவர்களை (நபித்துவத்திற்காக) தேர்ந்தெடுத்தோம். இன்னும் அவர்களுக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi87. இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (பலரை) மேன்மையாக்கி வைத்ததுடன் இவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினோம்.