قُلْ إِنِّى نُهِيتُ أَنْ أَعْبُدَ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ قُل لَّآ أَتَّبِعُ أَهْوَآءَكُمْ قَدْ ضَلَلْتُ إِذًا وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُهْتَدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வைத் தவிர நீங்கள் பிரார்த்திப்பவற்றை நான் வணங்குவதற்கு நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன்.” (நபியே!) கூறுவீராக: “உங்கள் ஆசைகளை பின்பற்றமாட்டேன். அவ்வாறாயின், வழிதவறிவிடுவேன். இன்னும் நேர்வழி பெற்றவர்களில் நான் இருக்க மாட்டேன்.”
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் பிரார்த்திப்பவற்றை நான் வணங்குவதற்கு நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன்.” (நபியே!) கூறுவீராக: “நான் உங்கள் ஆசைகளை பின்பற்றமாட்டேன். அவ்வாறாயின், நான் வழிதவறிவிடுவேன். இன்னும், நேர்வழி பெற்றவர்களில் நான் இருக்க மாட்டேன்.’’
Tamil Translation - Abdulhamid Baqawi56. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் (கடவுள்களென) அழைக்கிறீர்களோ அவற்றை வணங்கக்கூடாதென்று நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன். ஆகவே, உங்கள் மன விருப்பங்களை நான் பின்பற்ற மாட்டேன். அவ்வாறாயின், நிச்சயமாக நானும் வழி தவறிவிடுவேன்; நேரான வழியை அடைந்தவனாகமாட்டேன்.''