caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 42

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:42

وَلَقَدْ أَرْسَلْنَآ إِلَىٰٓ أُمَمٍ مِّن قَبْلِكَ فَأَخَذْنَٰهُم بِٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உமக்கு முன்னர் பல சமுதாயங்களுக்கு (தூதர்களை) திட்டவட்டமாக அனுப்பினோம். (அவர்கள் நிராகரித்து விடவே) அவர்கள் பணிவதற்காக வறுமை இன்னும் நோயைக் கொண்டு அவர்களைப் பிடித்தோம்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) உமக்கு முன்னர் பல சமுதாயங்களுக்கு (தூதர்களை) திட்டவட்டமாக அனுப்பினோம். (அவர்கள் நிராகரித்து விடவே) அவர்கள் (நமக்கு முன்) பணிவதற்காக வறுமை இன்னும் நோயின் மூலம் அவர்களைப் பிடித்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi42. (நபியே!) உமக்கு முன்னிருந்த பல வகுப்பினருக்கும் நாம் (நம் தூதர்களை) நிச்சயமாக அனுப்பி வைத்தோம். (எனினும் அத்தூதர்களை அவர்கள் நிராகரித்து விட்டனர். ஆகவே,) அவர்கள் பணிந்து வருவதற்காக நோயைக் கொண்டும், வறுமையைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடித்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70