caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 32

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:32

وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا لَعِبٌ وَلَهْوٌ وَلَلدَّارُ ٱلْـَٔاخِرَةُ خَيْرٌ لِّلَّذِينَ يَتَّقُونَ أَفَلَا تَعْقِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉலக வாழ்வு விளையாட்டும் கேளிக்கையும் தவிர வேறில்லை! (அல்லாஹ்வை) அஞ்சுபவர்களுக்கு மறுமை வீடுதான் மிக மேலானது. நீங்கள் (சிந்தித்துப்) புரியவேண்டாமா?
Tamil Translation - Omar Sharifஉலக வாழ்க்கை இல்லை, விளையாட்டும் கேளிக்கையும் தவிர. அல்லாஹ்வின் அச்சமுள்ளவர்களுக்கு மறுமை வீடுதான் மிக மேலானது. நீங்கள் (இதை சிந்தித்துப்) புரியவேண்டாமா?
Tamil Translation - Abdulhamid Baqawi32. இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமே தவிர வேறில்லை! எனினும் இறையச்சமுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது. (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70