وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوٓا۟ أَيْنَ شُرَكَآؤُكُمُ ٱلَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் நாளில். பிறகு, இணைவைத்தவர்களை நோக்கி, “(கடவுள்கள் என) நீங்கள் எண்ணிக்கொண்டிருந்த உங்கள் இணைகள் எங்கே?” என்று கூறுவோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் (மறுமை) நாளிலும் (வெற்றி பெற மாட்டார்கள்). பிறகு, இணைவைத்தவர்களை நோக்கி, “(கடவுள்கள் என) நீங்கள் பிதற்றிக்கொண்டிருந்த (நீங்கள் இணைவைத்து வணங்கிய) உங்கள் தெய்வங்கள் எங்கே?” என்று கூறுவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. நாம் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் (இவர்களில்) இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி, ‘‘(அல்லாஹ்விற்கு) இணையானவை என நீங்கள் எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவை எங்கே?'' என்று நாம் கேட்போம்.