إِنَّ ٱلَّذِينَ فَرَّقُوا۟ دِينَهُمْ وَكَانُوا۟ شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِى شَىْءٍ إِنَّمَآ أَمْرُهُمْ إِلَى ٱللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُوا۟ يَفْعَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக, தங்கள் மார்க்கத்தை (பலவாறாக)ப் பிரித்து (அவர்களும்) பல பிரிவினர்களாக ஆகிவிட்டார்களே அவர்களுடன் நீர் ஒரு விஷயத்திலும் இல்லை. அவர்களுடைய காரியமெல்லாம் அல்லாஹ்வின் பக்கம்தான் இருக்கிறது. பிறகு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் தங்கள் மார்க்கத்தை (பலவாறாக)ப் பிரித்துக்கொண்டு, (அவர்களும்) பல பிரிவினர்களாக ஆகிவிட்டார்களோ அவர்களுடன் நீர் (எந்த) ஒரு விஷயத்திலும் (கலந்தவராக) இல்லை. (அவர்களது மார்க்கம், அவர்களது வழிபாடு வேறு, உமது மார்க்கம், உமது வழிபாடு வேறு.) அவர்களுடைய காரியமெல்லாம் அல்லாஹ்வின் பக்கம்தான் இருக்கிறது. பிறகு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi159. எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தங்கள் இஷ்டப்படி பலவாறாக)ப் பிரித்து (அவர்களும்) பல பிரிவினராகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உங்களுக்கு ஒரு சம்பந்தமும் இல்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே இருக்கிறது. அவர்கள் செய்து கொண்டிருந்த (இத்தீய)வற்றைப் பற்றி பின்னர் அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான்.