ذَٰلِكَ أَن لَّمْ يَكُن رَّبُّكَ مُهْلِكَ ٱلْقُرَىٰ بِظُلْمٍ وَأَهْلُهَا غَٰفِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதற்குக் காரணம், நகரங்களை அங்கு வசிப்பவர்கள் கவனமற்றவர்களாக இருக்க (அவர்களுடைய ஷிர்க் எனும்) அநியாயத்தினால் அழிப்பவனாக உமது இறைவன் இல்லை என்பதாகும்.
Tamil Translation - Omar Sharifஅதற்குக் காரணமாவது, நகரங்களை, - அங்கு வசிப்பவர்கள் கவனமற்றவர்களாக இருக்கும் நிலையில் (அவர்களுடைய ஷிர்க் எனும்) - அநியாயத்தினால் உமது இறைவன் அழிப்பவனாக இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi131. (நபியே!) இ(வ்வாறு நபிமார்களை அனுப்புவ)தன் காரணமெல்லாம் அநியாயம் செய்த எவ்வூராரையும் அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் சமயத்தில் (எச்சரிக்கை செய்யாமல்) அவர்களை அழிப்பவனாக உமது இறைவன் இருக்கவில்லை என்பதுதான்.