وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِى ٱلْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ ٱللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇப்பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு நீர் கீழ்ப்படிந்தால் (அவர்கள்) உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுப்பார்கள். (அதிகமானோர்) யூகத்தைத் தவிர (உண்மையை) பின்பற்றமாட்டார்கள். கற்பனை செய்பவர்களாகவே தவிர (உண்மையை பின்பற்றுவோராக) அவர்கள் இல்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இப்பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு நீர் கீழ்ப்படிந்தால் (அவர்கள்) உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். (அதிகமானோர்) யூகத்தைத் தவிர (உண்மையை) பின்பற்றமாட்டார்கள். இன்னும், கற்பனை செய்பவர்களாகவே (-பொய்யை பின்பற்றுபவர்களாகவே) தவிர (உண்மையை பின்பற்றுபவர்களாக) அவர்கள் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi116. இப்புவியிலிருப்பவர்களில் பலர் (இவ்வாறே) இருக்கின்றனர். நீர் அவர்களைப் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை. மேலும், (வெறும் பொய்யான) கற்பனையில்தான் அவர்கள் மூழ்கியிருக்கின்றனர்.