caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 105

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:105

وَكَذَٰلِكَ نُصَرِّفُ ٱلْـَٔايَٰتِ وَلِيَقُولُوا۟ دَرَسْتَ وَلِنُبَيِّنَهُۥ لِقَوْمٍ يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நேர்வழி நாடுவோர் நேர்வழி பெற) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம். இன்னும், நீர் படித்தீர் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறிகின்ற மக்களுக்கு நாம் அதைத் தெளிவுபடுத்துவதற்காகவும் (நம் வசனங்களை விவரிக்கிறோம்).
Tamil Translation - Omar Sharif(நேர்வழியை நாடுவோர் நேர்வழிபெற நமது) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம். இன்னும், நீர் படித்தீர் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறிகின்ற மக்களுக்கு நாம் அதைத் தெளிவுபடுத்துவதற்காகவும் (நம் வசனங்களை தொடர்ந்து விவரிக்கிறோம்).
Tamil Translation - Abdulhamid Baqawi105. (இதை) நீர் (எங்களுக்கு) நன்கு ஓதிக் காண்பித்(து அறிவித்)தீர் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறியக்கூடிய மக்களுக்கு நாம் இதைத் தெளிவாக்குவதற்காகவும், (நம்) வசனங்களை இவ்வாறு பலவாறாக (அடிக்கடி) விவரிக்கிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70