caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hashr அத்தியாயம், வசனம் 8

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 101 · 59:8

لِلْفُقَرَآءِ ٱلْمُهَٰجِرِينَ ٱلَّذِينَ أُخْرِجُوا۟ مِن دِيَٰرِهِمْ وَأَمْوَٰلِهِمْ يَبْتَغُونَ فَضْلًا مِّنَ ٱللَّهِ وَرِضْوَٰنًا وَيَنصُرُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இன்னும் அந்த செல்வங்கள்) தங்கள் இல்லங்களை விட்டும் தங்கள் செல்வங்களை விட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அல்லாஹ்வின் சிறப்பையும் பொருத்தத்தையும் தேடுகிறார்கள். அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் உதவுகிறார்கள். அவர்கள்தான் உண்மையாளர்கள்.
Tamil Translation - Omar Sharif(இன்னும் அந்த செல்வங்கள் யாருக்கு கொடுக்கப்பட வேண்டுமென்றால்) தங்கள் இல்லங்களை விட்டும் தங்கள் செல்வங்களை விட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் தேடுகிறார்கள். இன்னும், அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் உதவுகிறார்கள். அவர்கள்தான் உண்மையாளர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. தங்கள் வீடுகளை விட்டும், தங்கள் பொருள்களை விட்டும் (அநியாயமாக) வெளிப்படுத்தப்பட்டு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்து வந்த ஏழைகளுக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் அல்லாஹ்வுடைய அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் அடையக் கருதி (தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள் ஆவர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70