caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hadid அத்தியாயம், வசனம் 29

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 94 · 57:29

لِّئَلَّا يَعْلَمَ أَهْلُ ٱلْكِتَٰبِ أَلَّا يَقْدِرُونَ عَلَىٰ شَىْءٍ مِّن فَضْلِ ٱللَّهِ وَأَنَّ ٱلْفَضْلَ بِيَدِ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவன் உங்களுக்கு இவ்வளவு நன்மைகளைக் கொடுத்தான்.) ஏனெனில், (இந்த தூதரை நம்பிக்கை கொள்ளாத) வேதத்தை உடையவர்கள் அல்லாஹ்வின் அருளில் எதன் மீதும் ஆற்றல் பெற மாட்டார்கள் என்பதையும் நிச்சயமாக சிறப்பு அல்லாஹ்வின் கரத்தில் இருக்கின்றது, அவன் நாடுகின்றவர்களுக்கு அதைக் கொடுக்கின்றான் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும். அல்லாஹ் மகத்தான சிறப்புடையவன்.
Tamil Translation - Omar Sharif(நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு இவ்வளவு நன்மைகளைக் கொடுத்தான்.) ஏனெனில், (இந்த தூதரை நம்பிக்கை கொள்ளாத) வேதக்காரர்கள் அல்லாஹ்வின் அருளில் எதன் மீதும் ஆற்றல் பெற மாட்டார்கள் என்பதையும்; நிச்சயமாக அருள் அல்லாஹ்வின் கரத்தில் இருக்கிறது, அவன் நாடுகிறவர்களுக்கு அதைக் கொடுக்கிறான் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. (இத்தூதரை நம்பிக்கை கொண்டவர்களுக்கு) அல்லாஹ்வுடைய அருளில் ஒரு பாகமும் கிடைக்காதென்று, வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இதை அவன் உங்களுக்கு அறிவித்தான்). அருள் அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில் தான் இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு அதை அளிக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70