caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tur அத்தியாயம், வசனம் 20

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 76 · 52:20

مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٍ مَّصْفُوفَةٍ وَزَوَّجْنَٰهُم بِحُورٍ عِينٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகட்டில்களில் வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகளில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு நாம் கண்ணழகிகளான வெண்மையான கன்னிகளை மணமுடித்து வைப்போம்.
Tamil Translation - Omar Sharif(தலையணைகள்) வரிசையாக வைக்கப்பட்ட கட்டில்களில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். கண்ணழகிகளான கருவிழிகளுடைய வெண்மையான பெண்களை அவர்களுக்கு நாம் மணமுடித்து வைப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களின் மீது சாய்ந்(து படுத்)தவர்களாக இருப்பர். நாம் அவர்களுக்கு (‘ஹூருல்ஈன்' என்னும்) கண்ணழகிக(ளாகிய கன்னி)களை திருமணம் செய்து வைப்போம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70