caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Qaaf அத்தியாயம், வசனம் 22

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 34 · 50:22

لَّقَدْ كُنتَ فِى غَفْلَةٍ مِّنْ هَٰذَا فَكَشَفْنَا عَنكَ غِطَآءَكَ فَبَصَرُكَ ٱلْيَوْمَ حَدِيدٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக இதை மறந்த நிலையில் நீ இருந்தாய். உன்னை விட்டும் உனது திரையை நாம் அகற்றினோம். ஆகவே, இன்றைய தினம் உனது பார்வை மிகக் கூர்மையானதாக இருக்கும்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக இதை மறந்(து அலட்சியம் செய்)த நிலையில் நீ இருந்தாய். ஆக, உன்னை விட்டும் உனது (மறதியின்) திரையை நாம் அகற்றி விட்டோம். ஆகவே, இன்றைய தினம் உனது பார்வை மிகக் கூர்மையானதாக இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. அவனை நோக்கி, ‘‘நிச்சயமாக நீ இதைப் பற்றிக் கவலையற்றிருந்தாய். உன் பார்வையை மறைத்துக் கொண்டிருந்த திரையை உன்னை விட்டும் நாம் நீக்கி விட்டோம். இன்றைய தினம் உன் பார்வை கூர்மையாயிருக்கிறது. (ஆகவே, நீ மறுத்துக் கொண்டிருந்ததை உன் கண் திறந்து பார்'' என்று கூறப்படும்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70