caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Qaaf அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 34 · 50:2

بَلْ عَجِبُوٓا۟ أَن جَآءَهُم مُّنذِرٌ مِّنْهُمْ فَقَالَ ٱلْكَٰفِرُونَ هَٰذَا شَىْءٌ عَجِيبٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, (அவர்களோ) அவர்களில் இருந்தே (-மனித இனத்தில் இருந்தே) ஓர் எச்சரிப்பாளர் அவர்களிடம் வந்ததால் அவர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆகவே, நிராகரிப்பாளர்கள், “இது ஒரு மிக ஆச்சரியமான விஷயம்” என்று கூறி (நபியை மறுத்த)னர். (அப்போது உங்கள் கெட்ட முடிவை மறுமையில் பார்ப்பீர்கள் என்று நபி அவர்களை எச்சரித்தார்கள். அதற்கு அவர்கள் கூறியதாவது:)
Tamil Translation - Omar Sharifமாறாக, அவர்களோ அவர்களில் இருந்தே (-மனித இனத்தில் இருந்தே) ஓர் எச்சரிப்பாளர் அவர்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டனர். ஆக, நிராகரிப்பாளர்கள், “இது ஒரு மிக ஆச்சரியமான விஷயம்” என்று கூறி (நபியை மறுத்து விட்ட)னர். (உங்கள் கெட்ட முடிவை மறுமையில் பார்ப்பீர்கள் என்று அவர்களை நபி எச்சரித்தார்கள். அதற்கு அவர்கள் கூறியதாவது:)
Tamil Translation - Abdulhamid Baqawi2. ஆயினும், அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் (-முஹம்மதாகிய நீர்) அவர்களில் இருந்தே (இறைத்தூதராக) அவர்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டு, இந்நிராகரிப்பவர்கள் ‘‘இது மிக அற்புதமான விஷயமென்று'' கூறுகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70